க்ஷத்திரிய வித்யாசாலா ஆங்கில வழி மழலையர் பள்ளியில் தைப்பொங்கல் திருவிழா
January 13, 2026
Kshatriya Vidhya Sala
0
க்ஷத்திரிய வித்யாசாலா ஆங்கில வழி மழலையர் பள்ளியில் 13.01.2026 அன்று தைப்பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. மாணவ, மாணவியர்கள் பாரம்பரிய உடை அணிந்து விழாவில் உற்சாகமாகக் கலந்து கொண்டனர். சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் புதுப்பானையில் பொங்கல் வைக்கப்பட்டு, “பொங்கலோ பொங்கல்!” என குழந்தைகள் மகிழ்ச்சியுடன் முழங்கினர். ப்ரீகேஜி, எல்கேஜி, யூகேஜி மாணவ – மாணவியருக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. யூகேஜி மாணவியர் முளைப்பாரி சுமந்து வந்த காட்சி அனைவரையும் கவர்ந்தது. ஆசிரியர்கள் கும்மி ஆடி மகிழ்ந்தனர். ஆசிரியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றதால் விழா மிகுந்த உற்சாகத்துடன் நிறைவு பெற்றது.