Kshatriya Vidhya Sala English Medium School

க்ஷத்திரிய வித்யா சாலா ஆங்கிலப் பள்ளியில் தைப்பொங்கல் விழா 14.01.2026 (புதன்கிழமை) அன்று காலை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

விழாவின் முக்கிய நிகழ்வாக, பள்ளி விளையாட்டு மைதானத்தில் 600 மாணவர்கள் ஒன்றிணைந்து ஜல்லிக்கட்டு காளை வடிவத்தை உருவாக்கினர். மேலும் 50 மாணவிகள் முளைப்பாரி சுமந்து வந்து கும்மி அடித்துப் பொங்கல் விழாவின் சிறப்பைப் பறைசாற்றினர்.

மாணவர்கள் காளையை அடக்கும் நிகழ்வையும் நடத்திக் காட்டினர். தமிழகத்தின் பாரம்பரிய நடனமான ஒயிலாட்டத்தை ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் ஆடினர். ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களது வழிகாட்டுதலுடன் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பொங்கலின் சிறப்பை எடுத்துரைக்கும் பாடல்களைப் பாடினர்.

ஆசிரியர்களால் பாரம்பரிய முறையில் பொங்கல் வைத்து பூஜையும் நடத்தப்பட்டது. இவ்வாறு பொங்கல் விழா சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்பட்டது.