Kshatriya Vidhya Sala English Medium School

க்ஷத்திரிய வித்யா சாலா ஆங்கிலப் பள்ளியில் பாரதியார் தினம் 20.01.2026 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10 மணியளவில்  சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அன்று மாணவர்கள் பாரதியார் வேடமிட்டும் அவரது முகமூடியை அணிந்தும் ஊர்வலமாக வந்தனர்.ஒன்றாம் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் பாரதியாரைக் கைதட்டி வரவேற்றனர். பாரதி ‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்’, என்று வீர முழக்கமிட்டும் உழவுத் தொழிலின் மேன்மையையும் பாடினார். பாரதி உரை, பாரதியார் பேட்டி, பாடல் பாடுதல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மாணவர்கள்
‘ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா !’ என்ற பாடலை உற்சாகத்துடன் பாடினர்.