திருவள்ளுவர் தின விழா – க்ஷத்திரிய வித்யா சாலையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது
- January 13, 2026
- Kshatriya Vidhya Sala
- 0
க்ஷத்திரிய வித்யா சாலா ஆங்கிலப் பள்ளியில் திருவள்ளுவர் தினவிழா 13.01.2026 அன்று காலை, செவ்வாய்க்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
திருக்குறள் தொடர்பாக பள்ளி மாணவர்களிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
உயர்திரு S.V.V. பரமானந்தம் – திருமதி ராஜசௌந்தரி அறக்கட்டளை வழங்கிய எண்டோவ்மெண்ட் நிதியின் மூலம் பரிசுகள் வழங்கப்பட்டன.
உயர்திரு S.V.V. குறளரசன் – திருமதி பானுரேகா குறளரசன் அவர்களால் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், இவ்வருடம் திரு. S.V.V. குறளரசன் அவர்கள் நம் பள்ளியின் திருக்குறள் அறக்கட்டளைக்குக் கூடுதலாக ரூபாய் 10,000/- (பத்தாயிரம்) மதிப்புள்ள காசோலையையும் வழங்கியுள்ளார்.
அன்னாரின் கல்விச் சேவையைப் பாராட்டி, பள்ளி நிர்வாகம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
தமிழ்த்துறையின் சார்பில் இவ்விழா சிறப்பாக நடத்தப்பட்டது.































