க்ஷத்திரிய வித்யாசாலா ஆங்கிலப் பள்ளியில் காமராஜரின் 122 வது பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு ரோபோடிக்ஸ் பற்றிய கல்வி அறிவை வளர்க்கும் வகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். அழைப்பை ஏற்று சூலக்கரை,இனாம் ரெட்டியாபட்டி மீசலூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் வருகை புரிந்து ரோபோக்களின் மூலம் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கியதையும் குறுங்கண்காட்சியையும் பார்வையிட்டு மகிழ்ந்தனர் . அன்று மதியம் நடைபெற்ற கல்வி வளர்ச்சி நாள் விழாவில் பள்ளி முதல்வர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குப் பள்ளி நிர்வாகத்தினர் பரிசளித்து மகிழ்ந்தனர்.நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.